செய்திகள் :

இரக்கம், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ்! - பிரதமர் மோடி இரங்கல்

post image

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்(88) இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனையுற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: துயரமான இத்தருணத்தில் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க சமூகத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரக்கம், எளிமை, ஆன்மிக துணிவு ஆகிய குணநலன்களின் அடையாளமாக கலங்கரை விளக்கமாக உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான மக்களால் போப் பிரான்சிஸ் என்றென்றும் நினைவில் வைத்து போற்றப்படுவார்.

அவர் ஏழை மற்றும் நலிவுற்ற மக்களுக்காக சேவையாற்றியவர். இன்னல்களால் துயருற்றவர்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்றிய பெருமகனார் என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

அமெரிக்க துணை அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 21) சந்தித்தார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற ஜே.டி. வான்ஸை ... மேலும் பார்க்க

உயர்தர போலி ரூ.500 நோட்டு.. மத்திய உள்விவகாரத் துறை எச்சரிக்கை!

மிக நவீனமான உயர்தர போலி ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உள்விவகாரத் துறை எச்சரித்துள்ளது.அச்சடிக்கப்பட்டிருக்கும் விதம், போலி ரூபாய் நோட... மேலும் பார்க்க

முன்னாள் டிஜிபி கொலை: விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்- கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் வருகைதந்திருக்கும் அவரது மூன்று குழந்தைகளும் பாரம்பரிய உடை அணிந்துள்ளனர்.நான்கு நாள்கள் பயணமாக இந்தியா வருகைதந்துள்ள அமெரிக்க து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரப் பள்ளிகளில் ஹிந்தி சேர்ப்பு: மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு!

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆ... மேலும் பார்க்க

இந்திய தேர்தல் முறையில் தவறு இருக்கிறது: ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அ... மேலும் பார்க்க