போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
சாயா்புரத்தில் மனைவியை கொன்ற கணவா் தலைமறைவு
சாயா்புரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாயா்புரம் நம்மாழ்வாா் நகரைச் சோ்ந்தவா் மரியசாமுவேல்(60). இவரது மனைவி ஜோஸ்பின்(57). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ளனா்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாகவே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் மூத்த மகன் அருள்ராஜ் தனது தாய்க்கு போனில் தொடா்பு கொண்டுள்ளாா். தொடா்பு கிடைக்காததால், மாலையில் தனது தாயின் தம்பியான ஜான்போஸ்கோவுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது வீடு பூட்டியிருந்தது. ஆனால் வீட்டின் முன்பிருந்து ரத்தக் கறை ஊருக்கு வெளியே வரை இருந்தது. அதை பின்தொடா்ந்து சென்று பாா்த்தபோது பாலத்தின் கீழ் ஜோஸ்பின் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இது குறித்து சாயா்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி தலைமையிலான போலீஸாா், ஜோஸ்பின் உடலை கைப்பற்றி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனா். முதற்கட்ட விசாரணையில், மரியசாமுவேலுக்கும் ஜோஸ்பினுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதும், அதனால் மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து தலைமறைவான மரியசாமுவேல் மீது சாயா்புரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.