தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
`இரட்டை கொலைக்கு மது விற்பனை காரணமில்லை' - மயிலாடுதுறை போலீஸார் விளக்கம்!
மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். சீவிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி சக்தி (20) கல்லூரி ஒன்றில் இன்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் நேற்று இரவு 10:30 மணியளவில் ஹரிஷ், ஹரி சக்தி இருவரையும் வெட்டி படுகொலைசெய்தனர். சாராய விற்பனையை தட்டி கேட்டதால் தான் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/17km0r97/70766d55-571d-4e73-ba89-31bb41d0c2c1.jpg)
``சாராய விற்பனை செய்யப்படுவது தொடர்பாக எட்டு முறை சம்பந்தப்பட்ட பெரம்பூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளேம். ஆனால் போலீஸ் மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. காலையில் கைது செய்தால் மாலையில் வெளியே வந்து விடுவர். இப்படித்தான் போலீஸ் நடவடிக்கை இருக்கிறது" எனக் குற்றம்சாட்டினர். மேலும் ஆத்திரத்தில் சாராய வியாபாரிகள் வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
இறந்த இருவரது உடல்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மயிலாடுதுறை- தஞ்சை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இருவர் கொலைக்கு சாராய விற்பனை காரணம் இல்லை. ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறுதான் காரணம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது, ``கடந்த 13ம் தேதி இரவு வடக்குத் தெருவில் மூவேந்தன் நின்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ், மூவேந்தனிடம் கூச்சலிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு, தினேஷ், ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோர் தெரிவில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நண்பர்களான மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை ஆகியோர் மதுபோதையில் தினேஷை கத்தியால் குத்த முயன்றுள்ளனர். இதை தடுக்க வந்த ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோரை கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டது. இதில் ஹரிஷ், ஹரி சக்தி இறந்து விட்டனர். கொலைக்கு காரணமான மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை ஆகியோரை கைது செய்து நடவடிக்கைக்கு உட்படுத்த இருக்கிறோம். மது விற்பனை தொடர்பாக இரட்டை கொலை நடந்ததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஒரே ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறுதான் கொலைக்குக் காரணம். உண்மைக்குப் புறம்பான தகவலை பரப்ப வேண்டாம்" என போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.