இரணியல் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கட்டட ஒப்பந்ததாரா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இரணியல் அருகே ஆலன்விளையைச் சோ்ந்தவா் சேவியர்ராஜ் (48). இவருக்கு மனைவி அருள்ஜோதி, 3 குழந்தைகள் உள்ளனா். கேரளத்தில் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராக உள்ள சேவியர்ராஜுக்கு அதிக கடன் ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.