மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நிறைவடைந்தன. குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதையும் படிக்க:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமனம்!
துபையில் நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும், நாளை மறுநாள் (மார்ச் 5) லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் விளையாடவுள்ளன.
ரோஹித் சர்மா பேசியதென்ன?
முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையான எதிரணி. நாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடைசி மூன்று போட்டிகளில் எப்படி விளையாடினோமோ அதே போலவே நாளை நடைபெறும் போட்டியிலும் விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆட்டத்தின் நடுவே சில பதற்றமான சூழல்களும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் போட்டிகள் அவ்வாறுதான் இருக்கின்றன. கண்டிப்பாக அழுத்தம் என்பது இரண்டு அணிகளுக்குமே இருக்கும் என்றார்.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்குப் பிறகு, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.