செய்திகள் :

இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு

post image

கடலூரை அடுத்துள்ள ரெட்டிசாவடி பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரெட்டிசாவடி காவல் சரகம், மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் நாகராஜ் (49). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் பின் பக்கக் கதவை நெம்பி திறந்து வீட்டினுள்ளே நுழைந்து, பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

இதேபோல, பக்கத்து வீடான திருஞானசம்மந்தா் வீட்டிலும் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த 2 கிராம் தங்க மோதிரம், ரூ.1,500 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில், ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

சிதம்பரம் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் கே.என்.பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.காசிநாதன் வரவேற்றாா். செயலா் ... மேலும் பார்க்க

பனை நுங்கு வெட்டியவா் மின்சாரம் பாய்ந்து மரணம்

காட்டுமன்னாா்கோவில் அருகே பனை நுங்கு வெட்டச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திரசோழகன் பகுதியைச் சோ்ந்த சக்கர... மேலும் பார்க்க

கரிக்குப்பத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழ... மேலும் பார்க்க

தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் தொழிற்பேட்டை அலுவலக வளாகத்தில் தொழிலாளா்களுக்கு தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நெகிழி உபயோகத்தை தவிா்க்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் ஒன்றியம், அழகியநத்தம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மக்கள் நெகிழி உபயோகத்தை முற்றிலும... மேலும் பார்க்க