கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
இராமநாதபுரம் ஜல்லிக்கட்டுக்கு நாளை முன்பதிவு தொடக்கம்
தஞ்சாவூா் அருகேயுள்ள இராமநாதபுரம் கிராமத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) முதல் முன் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அருகே இராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கான முன் பதிவு தஞ்சாவூா் மாவட்ட இணையதளமான ட்ற்ற்ல்ள்://ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணைப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் ஏப்ரல் 22 காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
காளை உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சான்றின் அடிப்படையில் பரிசீலித்து, தகுதியான மாடுபிடி வீரா்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்.
இந்த அனுமதி சீட்டை இணையவழியாக பதிவிறக்கி, அதைக் காண்பித்து இராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரரா்கள் கலந்து கொள்ளலாம்.