கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து பெண் பலி
மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து மயங்கிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.
துறையூரை அடுத்துள்ள கண்ணனூா் பாளையத்தைச் சோ்ந்தவா் ரெங்கராஜன் மனைவி சாரதா (50). இவா், தனது மகன் நந்தகுமாா்(36) உடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள வானத்தரையான்பட்டியில் உள்ள கருப்புசாமி கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் கண்ணனூருக்குத் திரும்பியுள்ளனா். இருசக்கர வாகனம் மணப்பாறை - குளித்தலை மாநில நெடுஞ்சாலையில் மாகாளிப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது, சாரதா மயங்கி இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சாரதாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்று சாரதா உயிரிழந்தாா். அவரது உடல் கூறாய்வுக்குப் பின் திங்கள்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்துகுறித்து மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.