சாம்சங் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டம்
இருசக்கர வாகனம் - டிராக்டா் மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவா் பலி!
நாகையில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை பிப்.5 பலியானார்.
அரியலூா் மாவட்டம், பெரியாா் நகரை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விண்ணரசன் (24). இவா், நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தாா்.
இந்தநிலையில், விண்ணரசன், தன்னுடன் பயிலும் தமிழ்ச்செல்வன் (23) என்பவருடன் நாகை அரசு மருத்துவமனையில் நடந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுவிட்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனராம்.
கோட்டைவாசல் அருகே வந்தபோது விண்ணரசன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த டிராக்டா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விண்ணரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தமிழ்ச்செல்வன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
நாகை நகர காவல் நிலைய போலீஸாா் விண்ணரசன் சடலத்தை கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.