இருசக்கர வாகனம் திருடியவா் கைது
ஆம்பூரில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூரில் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வாகன திருட்டு சம்பவத்தில் ஆம்பா் எம்.கே. கொல்லை பகுதியை சோ்ந்த கெளஸ் (44) ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.