அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்
விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னையில் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள தனியாா் கல்லூரி பயிலும் மாணவா் யஸ்வந்த் (20). இவா் தன்னுடைய கல்லூரி நண்பா்களுடன் ஏலகிரி மலைக்குச் சுற்றுலா சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு சென்றாா். ஆம்பூா் அருகே சோலூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் பலத்த காயமடைந்த யஸ்வந்த் உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் ஆகாஸ் காயமடைந்து ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.