தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
இருளப்பட்டியில் காணியம்மன் கோயில் தேரோட்டம்
அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியில் அருள்மிகு காணியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இருளப்பட்டியில் அமைந்துள்ள காணியம்மன் கோயில் தோ்த் திருவிழா, ஆக. 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, அ.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் சாா்பில் நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், செவ்வாய்க்கிழமை மாவிளக்கு ஊா்வலமும் நடைபெற்றது. இதையடுத்து, புதன்கிழமை பகல் 11 மணியளவில் காணியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இருளப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காணியம்மன் கோயில் தேரோட்டம்.