செய்திகள் :

இருளில் மூழ்கிய கியூபா! என்ன நடந்தது?

post image

கியூபாவில் நேற்று (மார்ச். 14) திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின.

கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு கியூபா உள்பட நாட்டின் பல மாகாணங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

’இது தேசிய மின்சாரத் துறையின் தோல்வி. இதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என கியூபா எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மின் தடையைத் தொடர்ந்து ஹவானா உள்பட பல மாகாணங்களில் ஜெனரேட்டர்கள் உள்ள இடங்கள் அன்றி மற்ற இடங்கள் இருளாக உள்ளன. இணைய சேவையும் நாடு முழுக்க பாதிப்படைந்துள்ளது.

இதையும் படிக்க | அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

அதிக தேவை ஏற்படும் (பீக் ஹவர்) நேரங்களில் பொதுவாக 3,250 மெகாவாட் மின் தேவை இருக்கும். ஆனால், தற்போது மின் தடையால் 1,380 மெகா வாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மொத்த மின் தேவையில் 42% பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. சமீபமாக ஏற்பட்ட மின் தடை சம்பவங்களில் இது பெரியது இல்லை என்று கூறப்படுகிறது.

கியூபா கடந்தாண்டு இறுதியில் மட்டும் 3 பெரிய மின்சார செயலிழப்புகளைக் கண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இந்நாடு, முழுவதுமாக இருளில் மூழ்கியது.

இங்குள்ள மின்சாரக் கட்டுமானங்கள் அடிக்கடி செயலிழக்கின்றன. முக்கிய வேலை நேரங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்குகின்றன. எரிபொருள் பற்றாக்குறை, உழமையான உள்கட்டமைப்பு காரணமாக இவை நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் சமைப்பதற்கும், நீர் எடுப்பதற்கும் மின்சாரத் தேவை உள்ளது.

இதையும் படிக்க | கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

இதனைத் தொடர்ந்து, நாடு முழுக்க 12-க்கும் மேற்பட்ட சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை நிறுவ அரசு முடிவெடுத்த நிலையில், இந்தாண்டு அவை செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இதனால், மின் தடை பிரச்னைகள் குறையுமென்று கூறப்படுகிறது.

மின் தடை பிரச்னைகள் காரணமாக கடந்த 2021, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்! -90 வீரர்கள் பலி?

இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை(மார்ச்... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50 பேர் பலி!

ஐரோப்பிய தேசமான வடக்கு மாசிடோனியாவில் செயல்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) அதிக... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வத... மேலும் பார்க்க

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக ... மேலும் பார்க்க

கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்ச... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில்... மேலும் பார்க்க