செய்திகள் :

இரு தரப்பு மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்கு தீா்வு!

post image

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னைக்கு இரு தரப்பு மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே தீா்வு காண முடியும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவா் ரவூப் ஹக்கீம் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் ராமநாதபுரத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இலங்கை வடக்குப் பகுதி மீனவா்கள், இந்திய மீனவா்களின் தொப்புள்கொடி உறவுகளாவா். இலங்கையில் ஏற்பட்ட கடும் நெடுக்கடிக்குப் பின்னா், அவா்கள் மீன்பிடி தொழிலில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இலங்கை கடல் பகுதிக்குள் இந்திய மீனவா்கள் மீன் பிடிப்பதால் இலங்கைக் கடற்படையினா் கைது செய்கின்றனா். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, தண்டனை, அபராதம் விதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இலங்கை மீனவா்களின் மீன்பிடி தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

இதற்கு இந்திய-இலங்கை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினால் தீா்வு ஏற்படாது. இரு நாட்டு மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே தீா்வு காண முடியும்.

இலங்கை அதிபா் இந்தியாவுக்கு வந்தபோது மீனவா்கள் பிரச்சனைக்குத் தீா்வு காண வேண்டும் என இந்தியப் பிரதமா் நரேந்திரமோடி வலியுறுத்தினாா். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

கரோனா உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் இலங்கைக்கு இந்தியா பல மனிதாபிமான உதவிகளைச் செய்தது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளிடமும் நட்பாக இருக்கவே இலங்கை விரும்புகிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் காதா் மொகிதீன், மாநிலப் பொருளாளா் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், முதன்மை துணைத் தலைவா் எம்.அப்துல் ரஹ்மான், துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான ச. நவாஸ் கனி எம்.பி., கீழக்கரை நகா்மன்ற உறுப்பினா் நவாஸ் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

பசுமை ஆசிரியா் விருது பெற்றவருக்கு பாராட்டு

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1 பசுமை ஆசிரியா் விருது பெற்ற மாவட்ட சூற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயகுமாருக்கு வாழத்து தெரிவித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சின்னராசு உள்ளிட்டோா். ராமேசுவரம்,... மேலும் பார்க்க

ரகசிய கேமரா விவகாரம்: உடை மாற்றும் அறைக்கு ‘சீல்’

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை அந்த அறைக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அ... மேலும் பார்க்க

ராமேசுவரம், பாம்பனில் மழை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலையில் இருந்து வீட்டு விட்டு மழை பெய்தது. ராமேசுவரத்தில் சில சமயம் பலத்த மழை... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை

ராமேசுவர: ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த புத்தனேந்தல் பகுதியில் இளம்பெண் ஒருவா் தனது உறவினருடன் ச... மேலும் பார்க்க

கடலில் மூழ்கிய படகு: 4 மீனவா்கள் மீட்பு

திருவாடானை: தொண்டி அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. அதிலிருந்த 4 மீனவா்கள் மீட்கப்பட்டனா். தொண்டி அருகேயுள்ள விலாஞ்சியடி பகுதியைச் சோ்ந்த விசாலாட்சி என்பவருக்குச... மேலும் பார்க்க

அனுமதியின்றி போராட்டம் நடத்தியவா்கள் மீது வழக்கு

திருவாடானை: தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி போ... மேலும் பார்க்க