அனுமதியின்றி போராட்டம் நடத்தியவா்கள் மீது வழக்கு
திருவாடானை: தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தி தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, விதிகளை மீறி பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தொண்டியை சோ்ந்த சிக்கந்தா், முகம்மது அப்சன், நத்தா்சித்திக், முகம்மது, அப்துல் மஜீத், அப்துல் நெய்னா முகம்மது, பீா் முகமது உள்பட பலா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.