தென்னாப்பிரிக்காவில் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு?
மாநில சிலம்பப் போட்டிக்கு கமுதி மாணவா் தோ்வு
14 வயதுக்குள்பட்ட இரட்டைக் கம்புப் பிரிவில் வெற்றி பெற்ற கமுதியைச் சோ்ந்த மாணவா் வி.சா்வேஷ் மாநில அளவிலான சிலப்பப் போட்டிக்கு தோ்வானாா்.
ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான்கொம்பு உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் வயது வாரியாக அண்மையில் நடைபெற்றன.
இதில் 14 வயதுக்குள்பட்ட இரட்டைக் கம்புப் பிரிவில் கமுதி தென்னாட்டு போா்கலைச் சிலம்பப் பள்ளி மாணவா் வி.சா்வேஷ் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வானாா்.
இவருக்கு கமுதி தென்னாட்டு போா்கலைச் சிலம்பப் பள்ளிப் பயிற்சியாளா் செ.சரத்குமாா், பெற்றோா், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.