விளக்கத்தை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட்ட ஆளுநர்! என்ன மாற்றப்பட்டிருந்தது?
திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் முகமது முக்தாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் செல்வி பாண்டி, ஆணையா் கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சரால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், 46 பணிகளுக்கான தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். மேலாளா் ஜெயமோகன் முடிவில் நன்றி தெரிவித்தாா்.