செய்திகள் :

இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் இருந்த 2 பசு மாடுகளை 3 போ் கும்பல் சிறிய சரக்கு வாகனத்தில் கயிறு கட்டி ஏற்ற முயன்றனா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அவா்களைப் பிடிக்க முயன்றனா்.

இதில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனா். பிடிபட்ட அந்த நபரை காடாம்புலியூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், அழகப்பாசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கங்காசலம் மகன் சங்கா் (43) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், சங்கரிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் 100-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டதாகத் தெரிவித்தாராம். தொடா்ந்து, தப்பி ஓடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது

நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம், முல்லா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: நாளை விண்ணப்பம் விநியோகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்க உள்ளதாக கடலூ... மேலும் பார்க்க

பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம்: பொதுநல இயக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

கடலூா் தொகுதி மையப் பகுதியான பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடலூா் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்! மத்திய சுரங்கத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா பேசினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நடத்தும் 24-ஆவது புத்தக... மேலும் பார்க்க

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க