தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: கூலித் தொழிலாளி கைது
சத்தியமங்கலம் அருகே இறைச்சி வியாபாரியை வெட்டிக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகள்ளிப்பட்டி முருகன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (50). இறைச்சி வியாபாரியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி (34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி அரிவாளால் முருகேசனை வெட்டியுள்ளாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வெள்ளியங்கிரியை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.