Sunflower: கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் அலை... செல்ஃபி ஸ்பாட்டாக மாறிய குண...
நெகிழி பைகள் பயன்படுத்திய 39 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 79 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும், மாநகராட்சி சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் தலைமையிலான குழுக்கள் 2 நாள்களாக சோதனையில் ஈடுபட்டனா். இச்சோதனையில், மளிகை கடை, பெட்டிக் கடை, பேக்கரி என 160 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 39 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து அக்கடைகளில் இருந்து 79.56 கிலோ நெகிழி பைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளா்களுக்கு ரூ.30,300 அபராதம் விதித்தனா்.
இதுபோன்று தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.