பாக். தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்
இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகுதியில் தனிப்பிரிவைச் சோ்ந்த ஜான்சன், சாமுவேல் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள தனியாா் பள்ளி முன்பு சந்தேகத்திற்கிடமாக வந்த சிறியரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனா்.
அதில், பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த தாளமுத்துநகா் பூபாண்டியபுரத்தைச் சோ்ந்த ராஜா மகன் சடைய மாரியப்பன்(23) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அந்த வாகனத்தில் இருந்த சுமாா் 1.5 டன் பீடி இலைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.