இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!
பிளஸ் 2: தூத்துக்குடியில் 96.19% மாணவர்கள் தேர்ச்சி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 96.19 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 8,741 மாணவர்கள், 10,501 மாணவிகள் என மொத்தம் 19242 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 8,229 மாணவர்கள், 10,280 மாணவிகள் என மொத்தம் 18,509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தின்படி, மாணவர்கள் 94.14 சதவீதம், மாணவிகள் 97.90 சதவீதம் என மொத்த தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும். மாநிலத்தில் 9-வது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டும் 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9-வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.