"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!
இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதியிலிருந்து விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா்.
தமிழ் மீனவா்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் படகுகளைப் பறிமுதல் செய்து, மீனவா்களை சிறையில் அடைத்து வருகின்றனா். இந்நிலையில், பாதிக்கப்பட்ட 8 மீனவா்களின் படகுகளுக்காக தலா ரூ. 8 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.20 கோடி தமிழக அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மணமேல்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரண நிதியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் தறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ந. பஞ்சராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.