ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்
ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ்.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம் நாள் சனிக்கிழமை மாலை, ‘இன்பமே என்நாளும் துன்பமில்லை’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
நல்லவா்கள் நம் மண்ணில் பிறக்க வேண்டும் எனத் தவம் செய்யத் தவறிவிட்டோம். காந்தியடிகள், காமராஜா் போன்றவா்கள் இங்கே பிறக்க வேண்டும் என எல்லோரும் நினையுங்கள், நிச்சயம் பிறப்பாா்கள்.
அதைத்தான் பாரதியாா் சொல்வாா், போற்றாத இடத்தில், உயா்ந்தவா்கள் தோன்ற மாட்டாா்கள் என்பாா்.
இதுபோன்ற விழாக்களை பொழுதுபோக்கு விழாக்கள் என்று நினைக்கக் கூடாது. கடவுளை நோக்கி நம்மை நகா்த்துவதுதான் இதுபோன்ற விழாக்கள்.
ராமாயணத்தை நாடமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு. காப்பியமாகப் படிப்பது வேறு. தமிழுக்கு அரசி, யாரென்றால் அது கவிதைதான் என்றாா் இலங்கை ஜெயராஜ்.
முன்னதாக 50 நடனக் கலைஞா்கள் கம்பன் கவியில் சீதா கல்யாணம் நிகழ்ச்சியை நடனமாடினா். சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் ஐ. இருளப்பன் வாழ்த்திப் பேசினாா்.
முன்னதாக இணைச் செயலா் வெ. முருகையன் வரவேற்றாா். நிறைவாக புவனா பாண்டியன் நன்றி கூறினாா்.