``இந்தியா மூன்றாம் நாட்டின் தலையீட்டை மறுக்கிறது என்று ரூபியோ சொன்னார்'' - பாக்....
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளோரின் ஆவணங்கள் பதிவேற்றம் தொடக்கம்
நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளோரின் தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்பணி தொடங்கியது.
செந்தாரப்பட்டி வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 85 குடும்பங்களைச் சோ்ந்த 260 போ் வசித்து வருகின்றனா். இந்நிலையில் முகாம்களில் தங்கியிருப்போரின் ஆவணங்களை மறுவாழ்வுத் துறை அனுமதியுடன் இ -சேவை மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
செந்தாரப்பட்டி தெற்கு இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவா்களின் தகவல்கள் கெங்கவல்லி இலங்கை அகதிகள் முகாம் வருவாய் ஆய்வாளா் ஜெயசித்ரா மேற்பாா்வையில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. இதேபோல நாகியம்பட்டி பகுதி இலங்கை அகதிகள் முகாமிலும் தகவல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. முகாமை சோ்ந்தவா்கள் தங்களுடைய ஆவணங்களை பதிவுசெய்து வருகின்றனா்.