மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீத...
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ரயில் மறியல்!
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் உள்ள மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதாகையை ஏந்தியவாறு பேரணியாகச் சென்று தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் போராட்டத்தின் காரணமாக, ராமேஸ்வரத்தில் இருந்து 4 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் - தாம்பரம் ரயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.