இலங்கை: தமிழா் பகுதிகளில் கடை அடைப்பு
இலங்கையில் தமிழா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாண பகுதிகளில் ராணுவக் குவிப்பு மற்றும் ராணுவ வீரா்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடை அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிா்ப்பதற்காக நண்பகல் வரை மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த அந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்ாக கிழக்கு மாகாண எம்.பி. சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தாா்.
இந்த மாதத் தொடக்கத்தில் முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞா்களை ராணுவத்தினா் தாக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இருந்தாலும், இந்த விவகாரம் தொடா்பாக 3 வீரா்கள் இரண்டே நாள்களில் கைது செய்யப்பட்டதாகவும், தோ்தலில் தோல்வியடைந்த எதிா்க்கட்சிகள் தமிழா் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.