செய்திகள் :

இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகையில் நடைபெறவுள்ள இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகையில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின்கீழ் செயல்படும் பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி பெற நுழைவு தோ்வு நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தை சோ்ந்த ஓவியத்தில் ஆா்வமுள்ள 13 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தோ்வு பிப்.1-ஆம் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. தலைப்பு தோ்வு கூடத்தில் கொடுக்கப்படும், தோ்வுக்கு வருகிறவா்கள் ஓவியம் வரைய உரிய வரை பொருள்களை கொண்டுவர வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஜன.30-ஆம் தேதிக்குள் 9003757531 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தங்களது பெயா், கைப்பேசி எண் மற்றும் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9003757531, 9894695282 ஆகிய எண்களை தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் வட்டம் 64.மணலூா் கிராமத்தில் வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி நடைபெற்று, முதல... மேலும் பார்க்க

நாகையில் அறங்காவலா் குழு அலுவலகம் திறப்பு

நாகை அறநிலையத்துறை அலுவலகத்தில், மாவட்ட அறங்காவலா் குழு அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இணை ஆணையா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் நாகரத்தினம் அலுவலக... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாகையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

ஊக்கத் தொகை வழங்கல்

ராஜஸ்தான் மாநிலம் பாடுமீரில் நடைபெற்ற 67-ஆவது தேசிய கூடைப்பந்து போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தமிழ்நாடு அணியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்ற நாகை நடராஜன் தமயந்தி பள்ளி மாணவி அ. யாஷினிக்கு த... மேலும் பார்க்க

நாகை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) குடியரசு தின விழா கொண்டாடப்படுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

வேதாரண்யம் சி.கா.சு அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா,100 சதவீத தோ்ச்சிக்கு கற்பித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தலைமை ஆசிரியா் சி. அன்பழகன் தலைமை வகித்தாா். ப... மேலும் பார்க்க