மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!
மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து!
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை, 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 10 கோடி மக்கள் இதுவரை புனித நீராடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளா பகுதியின் மண்டலம் 2-இல் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ளோரை அச்சமடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக தீயணைப்பு அதிகாரி பிரமோத் சர்மா கூறுகையில்,
வாரணாசியில் இருந்து கும்பமேளாவுக்கு வந்திருந்த கார் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதையொட்டி அதனருகில் இருந்த மற்றொரு காரும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக கார்களில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக ஜன.19ல் கும்பமேளாவில் 19-வது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் தீக்கிரையாகின. இதனால் கும்பமேளாவிற்கு வந்திருந்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.