செய்திகள் :

அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தி திராவிட மாடல் அரசு சாதனை!

post image

அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தி திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ வி.செழியன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு கல்வியாண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் ரூ.1,165 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் . கோ வி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாட்டிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி பல்வேறு சாதனைகளைத் திராவிட மாடல் அரசு படைத்து வருகிறது.

திராவிட மாடல் அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை பல ஆய்வுகள் மெய்பித்துள்ளன.

அதேபோல மாணவர்களுக்கான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை எந்த இடையூறு இல்லாதாதவாறு சாதிக்க சாத்தியப்படுத்தியுள்ளார் முதல்வர்.

இத்திட்டங்களை போலவே அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை உயர்த்தவேண்டும், உயர்கல்வி சேர்க்கையில் அவர்களுக்கான உரிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் எனும் நோக்கத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை திராவிட மாடல் அரசுசெயல்படுத்தும் என 20.9.2021 அன்று முதல்வர் அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முன்முயற்சியின்கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த நான்கு கல்வியாண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் ரூ. 1,165 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதில் எத்தகைய இடையூறையும் எதிர் கொண்டு விடக்கூடாது எனும் முதல்வரின் அக்கறை உள்ள நடவடிக்கையினால் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக தொழிற்படிப்புகளில் 35,530 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 2,382 பேர், வேளாண் படிப்புகளில் 1,369 பேர், கால்நடை மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளில் 261 பேர், சட்டப் படிப்புகளில் 626 பேர் என மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த நான்காண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டினால் பயனடைந்துள்ளார்கள்.

எல்லோருக்கும் எல்லாம் எனும் சமூக நீதிக் கண்ணோட்டத்தை அரசியல் லட்சியமாக கொண்டு செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசு அனைவருக்கும் வாய்ப்புகள் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கின்றது. தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை பொருத்தவரை அவர்களுக்கு தந்தையாக இருந்து அவர்களுக்கான திட்டங்களை உள்ளார்ந்த அன்போடும் அக்கறையோடும் நடைமுறைப்படுத்தி வருகிறார் முதல்வர்.

தமிழ்நாட்டின் தெருக்களில் முதல்வர் நடக்கும் தருணமெல்லாம் அவரை அப்பா! அப்பா! என உள்ளன்போடு தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்கள் அழைத்து மகிழ்வது முதல்வரின் இதுபோன்ற போன்ற சாதனைகளால்தான் என கூறியுள்ளார்.

குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

குவைத் நாட்டில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

பிரபல மருத்துவர் கே.எம். செரியன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: உலக புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புக... மேலும் பார்க்க

டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் அரிட்டாபட்டி... மேலும் பார்க்க

மருத்துவர் கே.எம்.செரியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மருத்துவர் செர... மேலும் பார்க்க

தெலங்கானா: லாரியில் இருந்த கம்பிகள் கார், ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் 4 பேர் பலி

தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டத்தில் லாரியில் இருந்த கம்பிகள் கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் கார், ஆட்டோவில் இருந்தவர்களில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாக தகவல்... மேலும் பார்க்க

குறுகிய காலத்தில் நிறைவடையும் பிரபல தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திரவியம் ... மேலும் பார்க்க