The Dark Legacy of Hitler’s Mass Killings | Benito Mussolini | History | Mussoli...
ரெட்ட தல: டப்பிங் பணிகளை முடித்த அருண் விஜய்!
நடிகர் அருண் விஜய் ரெட்ட தல படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வணங்கான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.
தொடர்ந்து, அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிட்டுள்ளனர். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அருண் விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துள்ளார்.