The Dark Legacy of Hitler’s Mass Killings | Benito Mussolini | History | Mussoli...
தில்லி மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்: உத்தரகண்ட் முதல்வர் தாமி
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதாக குற்றம் சாட்டிய உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராக உள்ளனர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைத்தால், தில்லியில் தற்போது செயல்படாத அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் என்று தாமி மேலும் கூறினார்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், படேல் நகரில் உள்ள ராம்ஜாஸ் மைதான பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராஜ் குமார் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய உத்தரகண்ட் முதல்வர் தாமி, தில்லி வளர்ச்சிக்காக காத்திருக்கும் தில்லி மக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உலக நாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவிகள் நிறுத்தம்: டிரம்ப் அதிரடி
மேலும் தில்லியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். நாங்கள் எந்தத் திட்டங்களை அறிவித்தாலும் அல்லது என்ன வாக்குறுதி அளித்தாலும் அது தொலைநோக்கு சார்ந்தவை. அனைத்து அம்சங்களையும் சரியாக ஆராய்ந்த பின்னரே நாங்கள் அதனை அறிவிக்கிறோம். காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே வழங்குகின்றன. தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைத்தால் தில்லியில் தற்போது செயல்படாத அனைத்து திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்துவோம் என்று தாமி கூறினார்.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் அரசாங்கம் தில்லி மக்களை "மீண்டும் மீண்டும் ஏமாற்றி" தில்லி அரசாங்கத்தை "மாஃபியா"விடம் ஒப்படைப்பதாக குற்றம் சாட்டிய தாமி, "பொய் சொல்வதற்கு தேசிய அளவிலான போட்டி இருந்திருந்தால், அதில் கேஜரிவால் முதலிடம் பெற்றிருப்பார் என்று கூறினார்.