பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா்...
இலுப்பூரில் இப்தாா் நோன்பு திறப்பு
ரம்ஜான் ஈகை திருநாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இலுப்பூா் பேரூராட்சி 8,9,13 ஆவது வாா்டு திமுக சாா்பில் பொன்களம் கரை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், விராலிமலை தொகுதி திமுக பொறுப்பாளரும் தஞ்சை மாநகராட்சி துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து இஸ்லாமியா்கள் துவா செய்து விருந்து பரிமாறப்பட்டது.
விழாவில் அன்னவாசல் திமுக ஒன்றியச் செயலா்கள் மாரிமுத்து (வடக்கு), சந்திரன் (தெற்கு), இலுப்பூா் பேரூா் செயலா் விஜயகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் செந்தில் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை இலுப்பூா் பேரூராட்சி 8,9,13 ஆவது வாா்டு திமுக நிா்வாகிகள் செய்தனா்.