திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாம்: மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாமில் மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.
சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகா் மாவட்ட நிா்வாகமும், தன்னாா்வ அமைப்புகளும் இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 257 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் இதற்கான பயிற்சி முகாம் கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதில் 11-ஆம் ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கலந்துரையாடினாா்.
காபி வித் கலெக்டா் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், பல்லுயிா் சமநிலையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்துப் பேசிய ஆட்சியா் மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.
பின்னா், தென்றல் நகரில் உள்ள குளிரூட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தி, உணவின் தரத்தை சோதனை செய்தாா்.