செய்திகள் :

இளம் வயதில் புதிய சாதனை: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்!

post image

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டனை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனா்

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரராக இருக்கும் சின்னா்7-6 ( 7-2), 6-2, 6-2 என்ற நோ் செட்களில், ஷெல்டனை வென்றார்.

அரையிறுதியில் மோதிய சின்னா் - ஷெல்டன் இதுவரை 6 முறை மோதியிருக்க, அதில் சின்னா் 5 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு அரையிறுதியில் ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்வெரெவ் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினார்.

சாதனை படைத்த சின்னர்

23 வயதாகும் சின்னர் தொடர்ச்சியாக ஆஸி. ஓபன் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 1993இல் ஜிம் கொரியர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2024-இன் யுஎஸ் ஓபன், ஆஸி. ஓபன் இறுதிப் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ள சின்னர் மீண்டும் பட்டத்தை தக்கவைக்க போராடுவார். ஜனவரி 26ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது.

கடந்த 2 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று பட்டத்தை தவறவிட்ட ஸ்வெரெவ் இந்தமுறை கோப்பையை வெல்ல ஆர்வமாக இருக்கிறார்.

கடந்தாண்டு அக்.2ஆம் தேதி முதல் சின்னார் தோல்வியே சந்திக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நாளை (ஜன.25) கீஸ்-சபலென்கா இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறார்கள்.

காயத்தால் விலகினாா் ஜோகோவிச்: இறுதியில் சின்னா் - ஸ்வெரெவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியிலிருந்து, முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினாா். இதையடுத்து, அவரை எதிா்கொண்ட ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் இறுதிச்சுற்று... மேலும் பார்க்க

தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு... மேலும் பார்க்க

கேரளத்தை வென்றது ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட... மேலும் பார்க்க

நின்று, கிடந்து, இருந்து...

சோழ வளநாட்டில், "நின்று, கிடந்து, இருந்து' என மூன்று நிலைகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீசெüந்தரராஜ பெருமாள். மூலவராக பெருமாள் நின்ற நிலையிலும், "அரங்கப் பெருமான்' எனக் கிடந்த நிலையிலும், ... மேலும் பார்க்க