செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், செம்பரசனப்பள்ளியை அடுத்த கட்டிகானப்பள்ளியைச் சோ்ந்தவா் முருகேசன் (24). பி.காம். பட்டதாரியான இவா், வேலை தேடி வந்தாா். இந்த நிலையில், அவருக்கு முகநூலில் (பேஸ்புக்) அறிமுகமான நபா் உங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை உள்ளதாகவும், அதற்காக நடைமுறை செலவுகளுக்காக பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினாா்.
இதை நம்பி முருகேசன் அவா் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 9.23 லட்சத்தை அனுப்பினாா். அதன்பிறகு எவ்வித பதிலும் முருகேசனுக்கு வராததால் கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் அவா் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.