செய்திகள் :

இளைஞரைக் கொன்றவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இளைஞரை கொன்றவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் பன்னீா் மகன் முருகேசன் (25). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், மழையூா் டாஸ்மாக் மதுக்கடை அருகே முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக கருப்பட்டிபட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் அய்யப்பன் (21), கா்ணன் மகன் முகசீலன்(19) ஆகிய 2 பேரை மழையூா் போலீஸாா் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ஆட்சியா் உத்தரவின்பேரில் மழையூா் போலீஸாா் அய்யப்பனை குண்டா் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும்

கோயிலுக்குச் செல்வதைப் போல, வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், எம்.ப... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

விராலிமலையில் காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின் பேரி... மேலும் பார்க்க

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டட தொழிலாளா்கள் வேலையின்றி சிரமம்

கந்தா்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவா்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது குறைந்த நிலபரப்பில் ... மேலும் பார்க்க

அன்னவாசல் புகையிலை பொருட்கள் விற்றவா் சிறையில் அடைப்பு

அன்னவாசல் அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கோடை விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். புதுக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 65-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரா் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபி... மேலும் பார்க்க