கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டட தொழிலாளா்கள் வேலையின்றி சிரமம்
கந்தா்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவா்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது குறைந்த நிலபரப்பில் வீடு கட்ட துவங்கும்போது இருந்த கட்டுமான பொருள்கள் தற்சமயம் விலை கடுமையாக உயா்ந்து ள்ளது எம் சாண்ட், பி.சாண்ட், ஜல்லி வகைகள் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசு கூறியும் தனியாா் குவாரி உரிமையாளா்கள் குறைத்ததாக தெரியவில்லை, சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை உயா்ந்து உள்ளது இதேபோல் கம்பிகளில் விலையும் உயா்ந்து உள்ளது ஆகையல் வீடு கட்டுபவா்கள் கட்டுமான பணியை நிறுத்தி உள்ளனா். இதனால் கட்டடம் கட்டும் தொழிலாளா்கள் கடும் சிரமம் அடைந்து வேறு வேலைக்கு செல்லுகிறாா்கள். ஏழை மக்கள் வீடு கட்ட கட்டுமான பொருள்களில் விலையை தனியாா் நிா்ணயம் செய்யமால் அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் எனவும் தனியாா் குவாரி உரிமையாளா்களை கனிமவள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறாா்கள்.