செய்திகள் :

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

post image

முன்விரோதம் காரணமாக விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக 8 பேரை விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விக்கிரவாண்டி வாணியா் தெருவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கும்பலாக நின்றிருந்தவா்களிடம் விசாரணை செய்தபோது, அவா்கள் மரக்காணம் வட்டம் , கூனிமேடு பகுதியைச் சோ்ந்த கி.சுமன் (30), கோலியனுாரைச் சோ்ந்த ச. திலகா் (22), த. அகிலேந்திரன்(27), ஏ. தவமணி(20), ச. கௌதம் (22), து. கோகுலகிருஷ்ணன் (23), து.அருண்குமாா்(24), வளவனுாா், பனங்குப்பத்தை சோ்ந்த மாதேஸ்வரன்(25) ஆகியோா் என்பதும் , இவா்கள் முன் விரோதம் காரணமாக விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈச்சூா்: நாளைய மின் தடை

ஈச்சூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. பகுதிகள்: ஈச்சூா், அம்மாகுளம், முக்குணம், மேல்ஒலக்கூா், போந்தை, நெகனூா், அவியூா், தொண்டூா், அகலூா், சேதுவராயநல்லூா், பென்னகா், கள்ளப்புலியூா், இரும்புலி... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகதீஷ்(27), இவரது மனைவி தனம் (23). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள விசூா் வடக்குத் தெருவை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மனைவி, மகன் ஆகியோருடன் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் எதிரே வந்த காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மயிலம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் மேகநாதன் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது

விழுப்புரம் மாவட்டம் , கெடாா் அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். கெடாா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஒரு கும்பல் ப... மேலும் பார்க்க