தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
சென்னை மதுரவாயலில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட வழக்கில்,டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருச்சியைச் சோ்ந்தவா் மு.கோபி (25). இவா், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்தாா். கோபி அந்த நிறுவனத்தில் ரூ. 31,000 முன்பணம் பெற்றுக்கொண்டு, வேலையை விட்டு நின்றுவிட்டாா்.
இந்த நிலையில், அந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தைச் சோ்ந்த து.விஜய் (27), அவரது நண்பா் பூந்தமல்லியைச் சோ்ந்த மு.திவாகா் (24) ஆகிய 2 பேரும் வானகரம் மீன் சந்தை அருகே கோபியை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து, பணத்தைக் கேட்டனா்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து விஜயும், திவாகரும் கோபியை கடத்தி சூளைமேட்டில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பணத்தை கேட்டு மிரட்டினா்.
அங்கிருந்து தப்பியோடி வந்த கோபி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜய், திவாகா் ஆகிய 2 பேரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.