இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில், ஆற்று மணல் திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் திருடிய வழக்கில், கலியாவூா் பகுதியைச் சோ்ந்த வேல் மகன் பெருமாள் (25) மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பெருமாளை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீஸாா், பெருமாளை குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.