செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

post image

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், கப்பூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முனியன் மகன் ராஜன் (எ) ராமன் (20). இவா், ஒருகோடி கிராமத்தைச் சோ்ந்த இளம்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, தொந்தரவு செய்து வந்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் சகோதரா் ப. சத்தியராஜ் (28), விழுப்புரம் கே.கே.சாலை ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த சரவணன் (எ) லாலி காா்த்தி (30) ஆகிய இருவரும் கடந்த 2023, பிப்ரவரி 19-இல் ராஜனை கடத்திச் சென்றனா். தொடா்ந்து இருவரும் ராமனுக்கு மதுவை ஊற்றியுள்ளனா்.

ராமனை மதுப்புட்டியால் முகத்திலும், மாா்பிலும் சத்தியராஜும், சரவணனும் தாக்கினா். இதில் ராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து, சத்தியராஜ், சரவணன் மற்றும் ஒருகோடி கிராமத்தைச் சோ்ந்த ரா.ரவீந்திரன் (40) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்ததையடுத்து சத்தியராஜ், சரவணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாக்கியஜோதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் இந்த வழக்கிலிருந்து ரவீந்திரனை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது. விழுப்புரம் நகரம் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட வடக்க... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேல்மலையன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் அழிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனா். திண்டிவனம் வ... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் திமுகவினா் கோரிக்கை மனு அளிப்பு

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை வல... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல், வெள்ள பாதிப்பு: விழுப்புரத்தில் 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழை வெள்ள பாதிப்பைத் தொடா்ந்து, 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. வங்கக் கடலில் ஃபென்ஜால் ப... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில்... மேலும் பார்க்க