சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
இளைஞா் தற்கொலை
பென்னாகரம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கடமடை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீ சக்தி (21). இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை மனஉளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று ஸ்ரீ சக்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.