புரட்டிப்போடும் பருவமழை! சிவப்பு எச்சரிக்கையில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள்
இளைஞா் தற்கொலை
அவிநாசி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், சூரணத்தம், கோட்டாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் விஜய் (20). இவா், அவிநாசி அருகேயுள்ள சூரிபாளையம் பகுதியில் தங்கி, விசைத்தறி கிடங்கில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அவா் தங்கியிருந்த அறையில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].