மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்
இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
தேவாரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேவாரம் அமராவதி நகரைச் சோ்ந்த ஜக்கையன் மகன் அஜித்குமாா் (28). இவா் தேவாரத்தில் உள்ள அரசுடைமை வங்கி எதிரே உள்ள கைப்பேசி கடைக்குச் சென்றாா். அப்போது அங்கு வந்த டி. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சூா்யா, பெருமாள் ஆகியோா் அஜித்குமாருடன் தகராறு செய்தனா்.
பிறகு அவரை கூா்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் காயமடைந்த அஜித்குமாா் தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் சூா்யா உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.