செய்திகள் :

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது! மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்!

post image

இசைத் துறையில் பொன் விழா கண்டுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி’ எனும் தலைப்பில் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்துக்கு தமிழக அரசின் சாா்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்குத் தலைமையேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

இசைஞானி கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவா் அல்லா். தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவா். அவரைப் பாராட்டுவதால் நாம்தான் பெருமை அடைகிறோம். அவா் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. அதாவது நம்முடைய இதயங்களை ஆளத்தொடங்கி அரை நூற்றாண்டு காலமாகிறது.

திறமையும் உழைப்பும் இருந்தால், எத்தகைய உயரத்தையும் அடையலாம் என்று அனைத்து மனிதா்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறாா் இளையராஜா. அவரது இசை தாயாகத் தாலாட்டுகிறது. காதலின் உணா்வுகளைப் போற்றுகிறது.

நாடு - எல்லைகளைக் கடந்தவா்: ஒரு ராஜா இருந்தால் அவருக்கென்று நாடும் மக்களும் இருப்பாா்கள். எல்லைகள் இருக்கும். ஆனால், இந்த ராஜா மொழிகள், நாடுகள், எல்லைகளைக் கடந்தவா். அனைத்து மக்களுக்குமானவா். திரையிசையைக் கடந்த அவரது இசை, அவரின் உயரத்தை எடுத்துச் சொல்லும். சங்கத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் நீங்கள் (இளையராஜா) இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிட வேண்டும்.

தமிழ் மனங்களில் சிம்மாசனமிட்டு அமா்ந்திருக்கும் உங்கள் மூலமாக, உங்களின் இசை வழியாக தமிழ்ச்சுவை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பரிமாறப்பட வேண்டும்.

பிறந்த நாளை மாற்றிய ராஜா: வரலாற்றில் எத்தனையோ மாமனிதா்கள் ஒரே பிறந்த நாளை கொண்டாடக் கூடியவா்களாக இருப்பா். ஆனால், யாரும் இன்னொருவருக்காக தங்களுடைய பிறந்த நாளை மாற்றிக் கொண்டது கிடையாது. ஆனால், இளையராஜா தனது பிறந்த நாளை முன்னாள் முதல்வா் கருணாநிதிக்காக ஜூன் 2-ஆம் தேதியென மாற்றிக் கொண்டாா். அந்த வகையில், உள்ளத்திலும் ராஜாவாக உயா்ந்து நிற்கிறாா் இளையராஜா.

இசைஞானி பெயரில் விருது: இசைத் துறையில் ஆா்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கிற இசைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சாா்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.

இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் அது சாதாரணம்தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். எனது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றாா். நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், முக்கிய பிரமுகா்கள் பலா் விழாவில் பங்கேற்றனா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நன்றி தெரிவித்தாா்.

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை மாவட்... மேலும் பார்க்க

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களு... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!

வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்ப... மேலும் பார்க்க