செய்திகள் :

'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!' என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இன்று சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியவர் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

அவர் பேசியதாவது, 'திமுக-வின் ஆட்சியை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அற்புதமான ஆட்சி என விதந்தோதியிருக்கிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களே உஷாராக இருங்கள். உங்களுக்கு சீட்டை எல்லாம் குறைத்து விடுவார்கள். நீங்கள் வேறு எங்கு செல்ல முடியும்? 4 ஆண்டுகளாக இந்த நாட்டிலே நடக்கிற அக்கிரமங்களை தட்டிக் கேட்க கூட்டணிக் கட்சிகளுக்கு வக்கில்லை.

கூட்டணி கட்சிகளுக்கே ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் மாநாட்டிற்கு அனுமதி இல்லை. திருச்சியில் விசிக-வின் மாநாட்டுக்கு அனுமதி இல்லை. விசிக-வால் கொடிக்கம்பம் நட முடியவில்லை. இவ்வளவு அசிங்கப்பட்டா நீங்கள் அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? அதிமுக-வை பொறுத்தவரை கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

இன்றைய சூழலில் எல்லா கட்சிகளும் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன. திமுக-வும் பாஜக-வோடு கூட்டணி வைத்திருக்கிறது. 1999 இல் அவர்களின் கூட்டணியில்தான் அமைச்சரவையிலெல்லாம் இடம்பெற்றிருந்தார்கள். இன்றைக்கு நாம் பாஜக-வுடன் கூட்டணி வைத்தவுடன் நம்மை பார்த்து திமுக-வினர் பயப்படுகின்றனர்.' என்றார்.

`இங்க வந்திடுங்க’ - தாக்கரேவை அழைத்த பட்னாவிஸ்... மறைமுகமாக தாக்கிக்கொண்ட உத்தவ் - ஷிண்டே!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வேயிக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் சிவசேனா உடைந்த பிறகு முதல் முறையாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், முன்னாள் முதல்வர்... மேலும் பார்க்க

RTE : 3 வருஷமா என்ன செய்தார் Anbil Mahesh? | ஸ்டாலினுக்கு புரிதலே இல்லை | Eshwaran Interview

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE) ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அவர்களுக்கான முழு க... மேலும் பார்க்க

ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள் குறித்து மருத்துவர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் ... மேலும் பார்க்க

`அதே டெய்லர்... அதே வாடகை..!’ - எடப்பாடியின் Bye Bye பாலிடிக்ஸின் `ஆந்திர’ பின்னணி என்ன?

வழக்கமாக தேர்தல் வந்துவிட்டால், கட்சியினரை களத்தில் இறக்கிவிட்டு களநிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வார்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள். ஆனால், தற்போது அந்த காலமெல... மேலும் பார்க்க

Ukraine War: "இந்தியா, சீனா, பிரேசில் மீது தடை விதிக்கப்படும்" - எச்சரிக்கும் நேட்டோ!

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வணிக உறவுகளைப் பேணுவதனால் இவற்றின்மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் போடப்படும் என எச்சரித்துள்ளார் NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே. அமெர... மேலும் பார்க்க