செய்திகள் :

இஸ்ரேல் பிணைக் கைதிகளைப் பிணமாகப் பார்ப்பீர்கள்! ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

post image

இஸ்ரேலிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்களை பிணைக்கைதிகளாகப் பார்க்க வேண்டிய அபாய நிலை உருவாகக்கூடும் என்று இஸ்ரேல் அரசுக்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கவனத்துக்குச் செல்லும் வகையில், ஹமாஸ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள காணொலியில், இஸ்ரேலிய பிணைக் கைதிகளாக சிக்கியிருக்கும் எல்கானா போஹ்போட் மற்றும் யோசேஃப்-ஹைம் ஒஹானா ஆகிய இருவரையும் சித்ரவதைச் செய்ய முற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

சமூக வலைதளமான டெலிகிராமில் ஹமாஸ் பயன்படுத்தும் பக்கத்தில் இந்த காணொலி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘நேரம் விரைவாகக் கடந்து கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கின்றது ஹாமாஸ் தரப்பு.

அத்துடன், ‘போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மட்டுமே உங்கள் நாட்டு மக்களை மீண்டும் தாயகம் அழைத்து வர வழிவகைச் செய்யும்’ என்று குறிப்பிட்டு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட இஸ்ரேலை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..!

மியான்மரில் இன்றும்(மார்ச் 30) மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து இன்று(மார்ச் 30) பாங்காக் பெருநகர அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: பாங்க... மேலும் பார்க்க

மியான்மருக்கு மேலும் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு: வெளியுறவு அமைச்சகம்

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து ‘ஆபரேசன் பிரம்மா’ பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மியான்மருக்கு இந்திய விமானப்படையின் இரண்டு சி - 17... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்: பிணைக்கைதிகள் விடுவிப்பு - ஹமாஸ்

கெய்ரோ: இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்; பிணைக்கைதிகளை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் தரப்பிலிருந்து சனிக்கிழமை(மார்ச் 29) தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டைக்கு முற்றுப்புள்ளி ... மேலும் பார்க்க

‘ஆட்சிக் கவிழ்ப்பு’ சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு!

வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இ... மேலும் பார்க்க