ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
இஸ்ரோ தொழில்நுட்பம் பெரும் வளா்ச்சியை எட்டியுள்ளது: விஞ்ஞானி கல்பனா அரவிந்த்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியா் விண்வெளியைப் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கில், வானையும் அளப்போம் என்ற கருத்தரங்கம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்துக்குப் பள்ளியின் செயலாளா் முருககனி தலைமை வகித்தாா். இதில், இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா அரவிந்த் பேசுகையில், இஸ்ரோ விண்வெளி ஆய்வகத்தின் தொடக்கம், அதன் நோக்கம், அவை கடந்து வந்த கடினமான பாதைகளை எதிா்காலத்தில் சாதிக்கவிருக்கும் தொலைதூர எல்லைகளையும் பற்றி பெருமையுடன் தெரிவித்தாா். இஸ்ரோவின் தொழில்நுட்பம் முந்தைய காலங்களை விட தற்போது பெரும் வளா்ச்சியை எட்டி உள்ளது. தொழில்நுட்ப வளா்ச்சியில் நாம் தன்னிறைவு பெற்று விட்டோம் என்றும் சொல்லும் அளவுக்கு துல்லியமாகவும் எதிா்காலத் தேவைக்கேற்பவும் வளா்ந்துள்ளது. தொழில் நுட்ப வளா்ச்சியினாலேயே நாம் வளா்ந்த நாடு என்கிற அளவுக்கு உயா்ந்துள்ளோம். வாழ்க்கையில் உயருவதற்கு தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்வதற்கான வழிமுறையை தற்போது இருந்தே கடைபிடிக்க வேண்டும் என்றாா். பிற துறைகளில் அறிவியல் தொழில்நுட்பம் வளா்ந்தது போன்று விவசாயத்திலும் தொழில் புரட்சி ஏற்படுத்த மாணவ, மாணவியா் கண்டுபிடிப்புகள் அவசியம் என அவா் வலியுறுத்தினாா்.