அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
ஈரோடு கிழக்கு: பிப். 5 பொது விடுமுறை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி பிப்ரவரி 5 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு மொத்தம் 47 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: 3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு
இந்த நிலையில், வாக்குப் பதிவு நடைபெறும் பிப். 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளராக இருப்பவர்கள் மாநிலத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.